
நிசப்தமான இரவு அது
உன் தந்தை ஊருக்கு விருந்தளித்தார்
உன் அக்கா கூட
உன் மீது பொறாமை கொண்டாள்.
உன்னை சுற்றி
உறவுகள் சூழ்ந்திருக்க நீ
உல்லாசமாய் படுத்துருக்கிறாய் இந்த
உலகை மறந்துக் கிடந்தாய்
உன்னை யாரும்
உசுப்பி விடவில்லை நீ
அசதியில் இருப்பாய் என்று
மணிக்கொரு முறை உன்
தாத்தாவும் பாட்டியும் நீ
படுத்திருக்கும் அறையை
எட்டி பார்த்தார்கள் நீ
சுகமாய் இருக்கிறாயா என்று
உன் சுகத்தில் தான்
எத்தனை பேருக்கு இன்பம்
என் இன்ப ராணியே ....
மீண்டும் ஒரு முதலிரவு வராதா ???
No comments:
Post a Comment